இந்நிலையில், ஈரோடு மாவட்டம், சி.எஸ்.ஐ., பள்ளி தேர்வு மையத்தில் நடந்த தேர்வின் போது, தனக்கொடி என்ற பெண்ணிடம், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு வினாத்தாளின் நகலை வைத்திருந்ததாக புகார் எழுந்தது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறியதாவது:தேர்வு நடப்பதற்கு முன், வினாத்தாள் வெளியாக வாய்ப்பில்லை. ஆனால், ஈரோட்டில் தேர்வு எழுதிய பெண்ணின் கையில் வினாத்தாள் நகல் இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வெழுதிய மாணவர் சுரேஷ் கூறும்போது, பொது அறிவு வினா எளிதாகவே இருந்தது. பொதுத் தமிழிலும் கஷ்டமான கேள்விகளும் இல்லை. கணக்கிலிருந்தும் கேள்வி எளிதாகவே கேட்கப்பட்டிருந்தன. சுருக்கமாகச் சொன்னால் படித்திருந்தால் அனைத்து கேள்விகளும் எளிது என்றார்.