இந்தக் கூட்டத்தில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். குறிப்பாக, பள்ளி வாகனத்திற்கான கட்டணம் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இதுகுறித்து, தமிழக தனியார் பள்ளி வாகனங்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் பெஞ்சமின் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நாங்கள் வாகனங்களை இயக்குகிறோம். சுமார் 50,000 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னையில் மட்டும் 7,000 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
பள்ளி பேருந்து விபத்தில் மாணவி உயிரிழந்ததையடுத்து, கடந்த சில நாட்களாக, வாகனங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த உள்ளோம். அதேபோல், வாகனத்தை இயக்குவதற்கான டீசல் விலையும் உயர்ந்து கொண்டே வருவதால், பள்ளி வாகனத்திற்கான கட்டணம் உயர்த்துவது தொடர்பாக, பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
எங்களின் கூட்டமைப்பின் சார்பில், சென்னை கே.கே.நகரில் இன்று (5ம் தேதி) கூட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.