Tuesday, January 31, 2012

உயர்நிலைப் பள்ளிகளுக்கு புதிதாக லேப் உதவியாளர் பணியிடங்கள்

உயர்நிலைப் பள்ளிகளுக்கு புதிதாக லேப் உதவியாளர் பணியிடங்கள்
தமிழகத்தில் சமச்சீர் கல்வியில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயர்நிலைப் பள்ளிகளுக்கு, "லேப்" உதவியாளர் பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன.

முதல் கட்டமாக, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு, பதவி உயர்வின் மூலம், "லேப்" உதவியாளர் பணியிடத்தை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நடப்பாண்டில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, செய்முறைத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், லேப் வசதி ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. உயர்நிலைப் பள்ளிகளில், இதுநாள்வரை, ஆசிரியரல்லா பணியாளர் பணியிடங்களில், அலுவலக உதவியாளர், ரிக்கார்டு கிளார்க், இளநிலை உதவியாளர் ஆகிய பணியிடங்கள் இருந்தன.

தற்போது, அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும், லேப் உதவியாளர் பணியிடங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், இப்பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றை அந்தந்த மாவட்டத்துக்குள் பதவி உயர்வு மூலம் நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இவற்றில், தலா ஒரு லேப் உதவியாளர் பணியிடங்களை உருவாக்குவதன் மூலம், 1,054 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த, 2009-10 கல்வியாண்டில், தரம் உயர்த்தப்பட்ட, 200 உயர்நிலைப் பள்ளிகள் உட்பட மற்ற உயர்நிலைப் பள்ளிகளுக்கும், படிப்படியாக லேப் உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

இப்பணியிடங்களை, பதவி உயர்வின் மூலம் நிரப்ப உத்தரவிட்டுள்ளதால், தற்போது அரசு பள்ளிகளில் ரிக்கார்டு கிளார்க்காக இருப்பவர்களுக்கு, "லேப்" உதவியாளராகவும், அலுவலக உதவியாளருக்கு, ரிக்கார்டு கிளார்க்காகவும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், 1,000க்கும் மேற்பட்டோருக்கு, உடனடியாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
Disqus Comments

Label

D.T.Ed. Exam Results health Syllabus download INSPECTORS OF MATRICULATION SCHOOLS - TAMIL NADU Music Special Teachers-Sewing SSLC Special Supplementary Examination June / July 2012 Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2012 Tamil Nadu Teachers Eligibility Test 2013 Mark List for Paper II and Paper II Technical Exam 2014 TET TET 2012 Syllabus TET மாதிரி வினாத்தாள் tnpsc group 4 answer key 2012 tnpsc group 4 question and answer ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர்கள் நியமனம் இனிமேல் "ஆன்-லைன்'னில் தான் விண்ணப்பிக்க வேண்டும் உங்கள் பள்ளி கல்வி உதவித்தொகை கல்விச்செய்தி குரூப் - 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு குரூப்-2: ஜூலை 20 முதல் 23 வரை நேர்முகத் தேர்வு சிறப்பாசிரியர் தேர்வு சிறப்பு தேர்வுக்கு செய்தி டி.இ.டி. டி.என்.பி.எஸ்.சி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தேர்வு தேர்வுகள் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு தத்கால் திட்டம் அறிவிப்பு பிற செய்திகள்

Archive