ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு பதிவுதாரர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர். வயது வரம்பு ஏதும் இல்லை. அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், அனைத்து வகுப்பைச் சேர்ந்த முன்னுரிமை உள்ளவர்கள், மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த முன்னுரிமையற்ற பெண்கள், ஆதிரிராவிட வகுப்பைச் சேர்ந்த அருந்ததியர் ஆகியோர் அனைவரும் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.
கல்வித் தகுதியும், பதிவு மூப்பும் உடைய பதிவு தாரர்கள், தங்களுடைய பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை திங்களன்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இதேப்போல ஓவியர் ஆசிரியர் காலிப் பணியிடத்திற்கும் 31.12.2010 வரை பதிவு செய்திருப்பர்களின் பெயர் பட்டியல் பரிந்துரை செய்யப்பட உள்ளது.
தகுதியுடையவர்கள் 3ம் தேதிக்குள் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது பெயர் பரிந்துரை பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்லாம் என ராமநாதபுர மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.