சென்னை: தொழிற்கல்வி படிப்புகளுக்கான ஒரே தேசிய நுழைவுத்தேர்வு குறித்து முடிவெடுக்க, மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு பிப்.,22ல் டெல்லியில் கூடுகிறது.
ஆனால், மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு, தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக நிலைப்பாடு
உயர்கல்வி சேர்க்கையை பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமான நடைமுறைகள் இருந்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, பிளஸ் 2 தேர்வில் முக்கியப் பாடங்களில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தொழிற்கல்வி சேர்க்கை நடந்து வருகிறது தேசிய அளவில் நடக்கும் நுழைவுத் தேர்வு திட்டத்தில் இணைய, தமிழக அரசு ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்ததோடு, தற்போது உள்ள நடைமுறையின்படியே தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறும் என, கூறிவிட்டது.
ராமசாமி குழு
ஆனாலும், உயர்கல்வி சேர்க்கையில் உள்ள பல வகையான நடைமுறைகளை களைந்து, தேசிய அளவில் ஒரே பொது நுழைவுத் தேர்வின் கீழ், தொழிற்கல்வி சேர்க்கையை கொண்டுவர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் ராமசாமியிடம், பொது நுழைவுத் தேர்வு குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்குமாறு, மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன்படி, பல்வேறு வகையான நுழைவுத் தேர்வு முறைகளை ஆய்வு செய்த ராமசாமி கமிட்டி, தேசிய அளவில் ஒரே பொது நுழைவுத் தேர்வை நடத்தலாம் என பரிந்துரைத்தது. இதையேற்று, இத்திட்டத்தை அமலுக்கு கொண்டு வரவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பரிந்துரை ஏற்பு
ராமசாமி கமிட்டி அளித்துள்ள பரிந்துரையில், "பொது நுழைவுத் தேர்வு, இரு தாள்களைக் கொண்டதாக இருக்கும். முதல் தாள், மாணவர்களின் சிந்திக்கும் திறனை அறிந்துகொள்ளும் வகையில், Objective type -ல் இருக்கும். இரண்டாவது தாள், மாணவர்களின் அடிப்படை அறிவியல் திறனை சோதிக்கும் வகையிலும், பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறனை அறியும் வகையிலும் இருக்கும்" என தெரிவித்துள்ளது.
இதை ஏற்று, "இந்திய அறிவியல்-பொறியியல் தகுதித் தேர்வு (ISEET- 2013) என்ற ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்; மெயின் மற்றும் அட்வான்ஸ் என, இரு தாள்களாக, அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் இத்தேர்வு நடைபெறும்&' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமைச்சர்கள் மாநாடு
மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு, மாநில அரசுகளின் கருத்தை கேட்க, 22ம் தேதி, டில்லியில் மாநில கல்வி அமைச்சர்களின் மாநாட்டை, மத்திய அரசு கூட்டியுள்ளது. அசோகா ஓட்டலில், காலை 11 மணிக்கு, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தலைமையில், மாநாடு நடக்கிறது.
இதில், மாநில கல்வி அமைச்சர்களின் ஒருமித்த கருத்துக்களை பெற்று, பொது நுழைவுத் தேர்வை இறுதி செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இம்மாநாட்டில், தமிழக உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் கலந்து கொள்கிறார். மத்திய அரசின் முடிவுக்கு, தமிழக அரசின் எதிர்ப்பை அமைச்சர் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Wednesday, February 15, 2012
பொது நுழைவுத்தேர்வை விவாதிக்க மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு
Share this
Recommended
Disqus Comments
Label
D.T.Ed. Exam Results
health Syllabus download
INSPECTORS OF MATRICULATION SCHOOLS - TAMIL NADU
Music
Special Teachers-Sewing
SSLC Special Supplementary Examination June / July 2012
Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2012
Tamil Nadu Teachers Eligibility Test 2013 Mark List for Paper II and Paper II
Technical Exam 2014
TET
TET 2012 Syllabus
TET மாதிரி வினாத்தாள்
tnpsc group 4 answer key 2012
tnpsc group 4 question and answer
ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர்கள் நியமனம்
இனிமேல் "ஆன்-லைன்'னில் தான் விண்ணப்பிக்க வேண்டும்
உங்கள் பள்ளி
கல்வி உதவித்தொகை
கல்விச்செய்தி
குரூப் - 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு
குரூப்-2: ஜூலை 20 முதல் 23 வரை நேர்முகத் தேர்வு
சிறப்பாசிரியர் தேர்வு
சிறப்பு தேர்வுக்கு
செய்தி
டி.இ.டி.
டி.என்.பி.எஸ்.சி
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை
தேர்வு
தேர்வுகள்
பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை
பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு தத்கால் திட்டம் அறிவிப்பு
பிற செய்திகள்