Wednesday, January 18, 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டுப்பாடு பற்றி குழப்பம்


விருதுநகர்: புதிய ஆசிரியர்கள் நியமனத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டுப்பாடு பற்றி குறிப்பிடாததால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், ஆசிரியருக்கான தகுதி தேர்வு எழுதி, ஐந்து ஆண்டுகளுக்குள் தேர்வானவர்களாக இருக்க வேண்டும், என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியர்கள் சங்கத்தினர், ஆசிரியர் தகுதி தேர்வு என்பது தேவையில்லாதது, என்றனர்.

பல ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தி, பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் , கடந்த ஒரு மாதமாக வழங்கப்படும் ஆசிரியர் நியமன உத்தரவில், தகுதி தேர்வு பற்றி குறிப்பிடாமல் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு வருகின்றது. புதிய ஆசிரியர்கள் நியமனத்தில், இந்த கட்டுப்பாடு நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க அரசும், பள்ளிக்கல்வித் துறையும் தெளிவான முடிவினை அறிவிக்க வேண்டும்.
Disqus Comments

Label

D.T.Ed. Exam Results health Syllabus download INSPECTORS OF MATRICULATION SCHOOLS - TAMIL NADU Music Special Teachers-Sewing SSLC Special Supplementary Examination June / July 2012 Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2012 Tamil Nadu Teachers Eligibility Test 2013 Mark List for Paper II and Paper II Technical Exam 2014 TET TET 2012 Syllabus TET மாதிரி வினாத்தாள் tnpsc group 4 answer key 2012 tnpsc group 4 question and answer ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ஆசிரியர்கள் நியமனம் இனிமேல் "ஆன்-லைன்'னில் தான் விண்ணப்பிக்க வேண்டும் உங்கள் பள்ளி கல்வி உதவித்தொகை கல்விச்செய்தி குரூப் - 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு குரூப்-2: ஜூலை 20 முதல் 23 வரை நேர்முகத் தேர்வு சிறப்பாசிரியர் தேர்வு சிறப்பு தேர்வுக்கு செய்தி டி.இ.டி. டி.என்.பி.எஸ்.சி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை தேர்வு தேர்வுகள் பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு தத்கால் திட்டம் அறிவிப்பு பிற செய்திகள்

Archive